வடவம்பளம் அதிஷ்டானம்

vadavambalam - adhistanam
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 58வது ஆசார்ய ஸ்வாமிகளான ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (1586) ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் விருதாச்சாலத்தில் பிறந்தார். அவர் சந்நியசம் ஏற்பதர்க்கு முந்தைய பெயர் விஸ்வேஸ்வரா. அவர் விஸ்தாரமான பல பயணங்கள் மேற்கொண்டு பெனெர்சில் வெகுகாலம் தங்கியிருந்தார். அவர் ஸ்ரீருத்ரம் மீது ஒரு பாஷ்யம் எழுதியுள்ளார். ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் உபதேசத்தின் பேரில் சதாசிவ ப்ர்ஹமேந்திரா குருரத்ன மாலிகா இயற்றினார்.

vadavambalam - adhistanam
vadavambalam - adhistanam

ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஈஸ்வர ஆண்டு (1638 AD) துலாம் மாதம் கிருஷ்ண அஷ்டமி அன்று தென் பினாகினி(தென் பென்னை என்று அழைக்கப்படுகின்ற) நதி கரையில் முக்தி அடைந்தார். பண்ருட்டி அருகே இருக்கும் வடவம்பளம் என்ற இடத்தில் ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது. பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகளின் வழிகாட்டுதலால் இந்த அதிஷ்டானம் கண்டுபிடிக்கப்பட்டது. அதை பற்றிய குறிப்புகளும் கோயில் சுவரில் நாம் காணலாம். 17 ஜனவரி 1927 அன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஜீர்னோதாரன கும்பாபிஷேகம் 17 ஜனவரி 1981 அன்று நடந்தது.

vadavambalam adhisthanam
vadavambalam adhistanam

ஸ்ரீ சங்கர மடம் கிளைகள்